புதுச்சேரி

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய பயிலரங்கம் நடந்த காட்சி.

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில்தேசிய பயிலரங்கம்

Published On 2023-01-19 10:43 IST   |   Update On 2023-01-19 10:43:00 IST
  • சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 ஐ முன்னிட்டு ஆரோக்கியமான வாழ்விற்கு ஊட்டச்சத்து மற்றும் சித்த உணவு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய பயிலரங்கம் நடைபெற்றது.
  • கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் அகா டமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகன் ஆராய்ச்சித்துறை டீன் வேல்முருகன், கல்லூரியின் வேலைவாய்ப்பு துறை அதிகாரின் கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பிரிவின் உணவியல் துறை மற்றும் புதுவை சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 ஐ முன்னிட்டு ஆரோக்கியமான வாழ்விற்கு ஊட்டச்சத்து மற்றும் சித்த உணவு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய பயிலரங்கம் நடைபெற்றது.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலான் இயக்குனர் தனசேகரன் துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராய ணசாமி கேசவன், இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாசலபதி ஆகியோர் வாழ்த்துகளுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.

பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் தலைமை தாங்கினார். கலை மற்றும் அறிவியல் கல்லூரி டீன் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார்.

கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் அகா டமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகன் ஆராய்ச்சித்துறை டீன் வேல்முருகன், கல்லூரியின் வேலைவாய்ப்பு துறை அதிகாரின் கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய இயக்குனர் மீனா குமாரி சிறப்புரையாற்றினார். ஆராய்ச்சி அதிகாரி ராஜேந்திர குமார் நோக்க உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக துணை இயக்குனர் சத்திய ராஜேஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவியல் துறை தலைவர் கவிதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News