புதுச்சேரி

அமலோற்பவம் பள்ளி மாணவர்களுடன் மயில்சாமி அண்ணாதுரை கலந்துரையாடிய போது எடுத்த படம்.

மாணவர்களுடன் மயில்சாமி அண்ணாதுரை கலந்துரையாடல்

Update: 2022-12-02 09:18 GMT
  • இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை புதுவை வந்தார். இங்குள்ள அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மற்றும் லூர்து அகாடமி மாணவர்களுடன் பள்ளி வளாகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் கலந்துரையாடினார்.
  • விழாவில் மயில்சாமி அண்ணாதுரைக்கு, அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி, லூர்து அகாடமி கல்வி நிறுவனங்களின் தாளாளரும், முதுநிலை முதல்வருமான லூர்துசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

புதுச்சேரி:

இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை புதுவை வந்தார். இங்குள்ள அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மற்றும் லூர்து அகாடமி மாணவர்களுடன் பள்ளி வளாகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசுகையில் 'இயற்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு என்பதை கவனித்து அந்த காரணத்தை அறியவேண்டும். இயற்கையின் ஆயிரக்கணக்கான அதிசயம் தொடர்பாக பல்லாயிரம் வினாக்களுக்கு விடை காணப்படவில்லை . மாணவர்கள் இது தொடர்பாக ஆராய்ந்து ஏன்? எதற்கு? எப்படி? என்பது போன்ற அறிவார்ந்த வினாக்களை எழுப்ப வேண்டும். இதுபோன்ற மன நிலை மட்டுமே அவர்களின் அறிவை வார்த்தெடுத்து புதுப்புது கண்டுபிடிப்புகளை நோக்கி உந்தித்தள்ளும் என்றார். தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார்.

விழாவில் மயில்சாமி அண்ணாதுரைக்கு, அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி, லூர்து அகாடமி கல்வி நிறுவனங்களின் தாளாளரும், முதுநிலை முதல்வருமான லூர்துசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News