புதுச்சேரி

கோப்பு படம்.

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2022-10-12 13:18 IST   |   Update On 2022-10-12 13:18:00 IST
  • நெட்டப்பாக்கத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
  • அப்போது ஒருவர் செல்போனில் லாட்டரி முடிவுகளை வாடிக்கை யாளர்களுக்கு தெரிவித்து கொண்டி ருந்ததை போலீசார் கண்டனர்.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம்-கரியமாணிக்கம் சந்திப்பில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக நெட்டப்பாக்கம் போலீ சாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர். அப்போது ஒருவர் செல்போனில் லாட்டரி முடிவுகளை வாடிக்கை யாளர்களுக்கு தெரிவித்து கொண்டி ருந்ததை போலீசார் கண்டனர். உடனே அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தமிழக பகுதியான பாக்கம் வெள்ளாழங்குப்பம் மெயின் ரோட்டை சேர்ந்த இளங்கோ (48) என்பதும், இவர் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுக்களை ரகசியமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இளங்கோவனை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 3 நம்பர் லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.3 ஆயிரத்து 300 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News