புதுச்சேரி

திருக்கனூர் லயன்ஸ் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் பெயர் பலகையை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்த போது எடுத்த படம்.

லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

Published On 2022-09-19 04:42 GMT   |   Update On 2022-09-19 04:42 GMT
  • லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருக்கனூர் போன் நேரு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
  • சேவை திட்டங்களை உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருக்கனூர் போன் நேரு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு துரை. ஜானகிராமன், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆண்டிற்கான புதிய தலைவராக தமிழ்மணியும், செயலாளராக அசாருதீனும், பொருளாளராக இளங்கோ–வனும் பொறுப்பேற்று கொண்டனர். அவர்களை லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் ராஜன் பதவியில் அமர வைத்தார். முன்னாள் மாவட்ட ஆளுநர் சரவணன் புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்தார்.

சேவை திட்டங்களை உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் தொடங்கி வைத்தார். லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஆனந்தகுமார், நாகலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சால்வை அணிவித்து பாராட்டி பேசினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு புடவை, அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

லயன்ஸ் சங்க நிர்வாகி பரந்தாமன் நன்றி கூறினார். இதனை தொடர்ந்து திருக்கனூர் கடைவீதி மற்றும் உட்புற தெருக்களில் திருக்கனூர் லயன்ஸ் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள் டிஜிட்டல் பெயர் பலகைகளை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்.

இதில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் வீரராகவன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News