புதுச்சேரி

கோப்பு படம்.

வாடகை இருசக்கர வாகனங்களுக்கு உரிமம்-அமைச்சர் சந்திரபிரியங்கா வழங்கினார்

Published On 2023-02-01 06:33 GMT   |   Update On 2023-02-01 06:33 GMT
  • புதுவையில் சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனங்களில் உலா வருவதை பெரிதும் விரும்புகின்றனர்.
  • இந்த பரிந்துரையை ஏற்று புதுவை அரசு, வாடகை இருசக்கர வாகனங்களுக்கு உரிமம் வழங்க நடவடிக்கை எடுத்தது.

புதுச்சேரி:

புதுவையில் சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனங்களில் உலா வருவதை பெரிதும் விரும்புகின்றனர்.

இவர்களுக்காக அங்கீ காரமின்றி பலர் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுகின்றனர். இதனால் பல சமூக விரோத செயல்களும் அரங்கேறின. இதையடுத்து இருசக்கர வாகனங்களை அங்கீகரித்து கருப்பு நிறத்தில் நம்பர் பிளேட், மஞ்சள் நிற எழுத்துக்களுடன் அனுமதி அளித்து வரி வசூலிக்கலாம். இதனால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என போக்குவரத்து போலீசார் அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

இந்த பரிந்துரையை ஏற்று புதுவை அரசு, வாடகை இருசக்கர வாகனங்களுக்கு உரிமம் வழங்க நடவடிக்கை எடுத்தது. இருசக்கர வாகன வாடகை நிலையங்கள் நடத்துவதற்காக வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்தது.

இருசக்கர வாகன வாடகை நிலையம் நடத்த குறைந்த பட்சம் 5 வாகனங்கள் வைத்திருக்கவேண்டும். தனி பார்க்கிங் வசதி இடம் இருக்க வேண்டும். ஒரு வாகனத்திற்கு ஆண்டிற்கு ரூ.1000 அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி இருசக்கர வாடகை வாகனங்களுக்கு உரிமம் வழங்கும் பணியை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில்,

அரசின் விதிகளுக்கு உட்பட்டு இருசக்கர வாகனங்கள் வாடகை விட விரும்புவோர், வட்டார போக்குவரத்து அலுவ லகத்தில் விண்ணப்பித்தால், ஆய்வு செய்து உரிமம் வழங்கப்படும்.

அரசின் உரிமமின்றி, வாடகைக்கு விடப்படும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News