புதுச்சேரி

புதிய குடியிருப்பு கட்டுமான பணியை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்து கோவில் யானையிடம் ஆசி பெற்ற காட்சி.

புதிய குடியிருப்பு-அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார்

Published On 2022-09-30 15:00 IST   |   Update On 2022-09-30 15:00:00 IST
  • புதுவை மணக்குள விநாயகர் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கட்டிடம் தியாகராஜா வீதியில் அமைந்துள்ளது.
  • ரூ.97 லட்சத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசின் அனுமதி பெறப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை மணக்குள விநாயகர் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கட்டிடம் தியாகராஜா வீதியில் அமைந்துள்ளது.

இந்த கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து காணப்பட்டது. அதில் குடியிருந்தோருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பாழடைந்த குடியிருப்பு கட்டிடத்தை இடிக்கவும், புதிதாக கட்டிடம் கட்டி எழுப்பவும் குடியிருப்புவாசிகளுக்கு உறுதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாழடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய மூன்றடுக்கு கொண்ட குடியிருப்பு கட்ட ரூ.97 லட்சத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசின் அனுமதி பெறப்பட்டது.

இதற்கான பூமிபூஜை  நடைபெற்றது.பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி–நாராயணன் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆலய அறங்காவலர் குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News