புதுச்சேரி

கர்லா கட்டை சுற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள்.

கர்லா கட்டை சுற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி

Published On 2022-12-11 06:31 GMT   |   Update On 2022-12-11 06:31 GMT
  • கர்லா கட்டை சுற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி புதுவை கடற்கரை காந்தி திடலில் (திங் கட்கிழமை ) காலை 7 மணி அளவில் நடக்கிறது.
  • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந் து கொண்டு சாதனை நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

புதுச்சேரி:

சர்வதேச கர்லாகட்டைதினத்தையொட்டி 100 பேர் ஒரே இடத்தில் கர்லா கட்டை சுற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி புதுவை கடற்கரை காந்தி திடலில் (திங் கட்கிழமை ) காலை 7 மணி அளவில் நடக்கிறது. பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சிக்கு அதன் நிறுவனரும் சத்திரிய சேனா சேவக நிறுவனருமான ஜோதி செந்தில் கண்ணன் தலைமை தாங்குகிறார்.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந் து கொண்டு சாதனை நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இதில் முதல்-அமைச்சர் ரங்க சாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக சத்திரிய சேனா சேவக பொதுச்செயலாளர் வெற்றிச்செல்வம் அனைவரையும் வரவேற்கிறார். அதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்தில் புதுவை, சென்னை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், பீகாரை சேர்ந்த 10 பேர் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 12 பேர் தனித்தனியாக கர்லா கட்டை சுற்றும் சாதனை நிகழ்ச்சியும் நடக்கிறது.

Tags:    

Similar News