புதுச்சேரி

கோப்பு படம்.

கல்வீடு கட்டும் திட்டத்துக்கு மீண்டும் காமராஜர் பெயர்-சிவா வலியுறுத்தல்

Published On 2022-11-28 08:21 GMT   |   Update On 2022-11-28 08:21 GMT
  • புதுவையில் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் சிறப்பாக செயல்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசு காமராஜர் பெயரிலான இத்திட்டத்தை பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்தது.
  • மீண்டும் காமராஜர் கல் வீடு கட்டும் திட்டம் என்ற பெயரை கல்வீடு கட்டும் திட்டத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி–ருப்பதாவது:-

புதுவையில் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் சிறப்பாக செயல்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசு காமராஜர் பெயரிலான இத்திட்டத்தை பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்தது. இத்திட்டத்தில் மத்திய அரசு ரூ.1.5 லட்சம் மட்டுமே வழங்குகிறது. மாநில அரசை விட ரூ.2 லட்சமாக மத்திய அரசைவிட கூடுதலாக வழங்கி வருகிறது.

இத்திட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் விண்ணப்பித்து நிதியுதவி கேட்டு வருபவர்களுக்கு நிதி வழங்கப்படாமல் உள்ளது. சுமார் ஆயிரம் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசிடம் மானியம் விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வீடுகட்டுவதற்காக மக்கள் சேமித்து வைத்திருந்த பணம் கரைந்துவிட்டது.

சிலர் வாங்கி வைத்திருந்த கடனையும் காலி செய்துவிட்டு, அதற்கு வட்டி கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இத்திட்டத்தில் நிதியுதவி வழங்காததால், விண்ணப்பித்துள்ள மக்கள் திட்டத்திற்கு காமராஜர் பெயரை மாற்றியதுதான் ராசியில்லையோ என்றும் புலம்பி வருகின்றனர்.

மீண்டும் காமராஜர் கல் வீடு கட்டும் திட்டம் என்ற பெயரை கல்வீடு கட்டும் திட்டத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உடனடியாக முதல் தவணைத்தொகையை கொடுத்து பயனாளிகள் வீடுகட்டும் பணியை தொடங்கச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News