இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி:
புதுவை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கூட்டாட்சி பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
கூட்டாட்சியை பாதுகாத்திட வலியுறுத்தியும், கவர்னர் பதவியை ரத்து செய்திட கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஜென்மராக்கினி மாதா கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணை செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா கலைநாதன், பொருளாளர் வ.சுப்பையா, நிர்வாக குழு உறுப்பினர்கள் அந்தோணி, ரவி, அமுதா, மாநில குழு உறுப்பினர்கள் அபிஷேகம், ராமமூர்த்தி, கீதநாதன், தயாளன், தொகுதி செயலாளர்கள் துரைசெல்வம், பெருமாள், ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்தியில் பா.ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தாக்கம் அழிக்கப்படுகின்றது. கூட்டாட்சி முறை சிதைக்க ப்படுகின்றது.
கவர்னர் பதவிகள் மூலம் மாநில அரசின் நடவடிக்கை களில் தலையிட்டு மாநில உரிமைகளை பறித்து மத்திய அரசின் கைப்பாவையாக மாற்ற முயற்சிக்கிறது.
பா.ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் கவர்னர்களின் மூலம் போட்டி அரசாங்கத்தை நடத்துகின்றது. இதற்கு உதாரணமாக புதுவை திகழ்கிறது. மத்திய அரசின் மாநில உரிமைகளுக்கு எதிரான செயலினை நடைமுறைப்படுத்தும் கவர்னர் பதவிகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.