புதுச்சேரி
புதுவை மாவட்ட மாநாடு தமிழ் சங்கத்தில் நடைபெற்ற காட்சி.
null
வீடு கட்டும் மானியத்தை உயர்த்த வேண்டும்-கம்யூனிஸ்டு தீர்மானம்
- கம்யூனிஸ்டு (எம்எல்) புதுவை மாவட்ட மாநாடு தமிழ் சங்கத்தில் நடந்தது. மாநாட்டிற்கு சக்திவேல், விசாலாட்சி, குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். முருகன் வரவேற்றார்.
- புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது.
புதுச்சேரி:
கம்யூனிஸ்டு (எம்எல்) புதுவை மாவட்ட மாநாடு தமிழ் சங்கத்தில் நடந்தது.
மாநாட்டிற்கு சக்திவேல், விசாலாட்சி, குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். முருகன் வரவேற்றார். மாநில செயலாளர் சோ.பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார்.
மாநாட்டில், மூடப்பட்ட பஞ்சாலை, கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து இயக்க வேண்டும். மின்துறை தனியார் மயத்தை நிறுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி மருந்துகள் கிடைக்க நடவடிக்கை வேண்டும்.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட மானியத்தை ரூ.7 லட்சமாக உயர்த்த வேண்டும். புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட. தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.