புதுச்சேரி

பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கி வாழ்த்திய காட்சி.

பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை-முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்

Published On 2022-09-19 14:42 IST   |   Update On 2022-09-19 14:42:00 IST
  • 12-ம் வகுப்பில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற நாடார் சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

புதுச்சேரி:

காமராஜரின் பிறந்தநாளையொட்டி நாடார் சங்கத்தின் சார்பில் 2021-22ம் ஆண்டு கல்வி ஆண்டில் 10 மற்றும்

12-ம் வகுப்பில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற நாடார் சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு புதுவை நாடார் உறவின் முறை ச்சங்க தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் பழனிவேல் நாடார் வரவேற்றார். செயலாளர் மாரிமுத்து நாடார் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் ஜான்குமார் எம்.எல்.ஏ., நாடார் சங்க அவைத்தலைவர் ராமபாண்டிய நாடார், துணை தலைவர்கள் ஆனந்த முருகேசன் நாடார், தங்கமணி நாடார், பால்ராஜ் நாடார், மகராஜா நாடார், தாமோதரன் நாடார், நித்தியானந்தம் நாடார் மற்றும் நிர்வாகிகள் கலந்து ெகாண்டனர்.

Tags:    

Similar News