புதுச்சேரி

சின்ன கோட்டகுப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் ஹைமாஸ் விளக்கு அமைப்பதற்கான பூமி பூஜையை நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ். ஜெயமூர்த்தி தொடங்கி வைத்த காட்சி. 

கிழக்கு கடற்கரை சாலையில் ஹைமாஸ் விளக்கு அமைக்கும் பணி

Published On 2022-12-17 14:35 IST   |   Update On 2022-12-17 14:35:00 IST
  • கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட சின்ன கோட்டக்குப்பம் புதுவை -சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சாலையில் சுமார் ரூ.9.80 லட்சம் மதிப்பிலான புதிய உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க பூமி பூஜை விழா நடந்தது.
  • தி.மு.க. 25-வது வார்டு கவுன்சிலர், சரவணன், 6-வது வார்டு கவுன்சிலர் சண்முகம் மற்றும் கூட்டணி கட்சி வார்டு கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட சின்ன கோட்டக்குப்பம் புதுவை -சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சாலையில் சுமார் ரூ.9.80 லட்சம் மதிப்பிலான புதிய உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க பூமி பூஜை விழா நடந்தது.

விழாவில் கோட்டக்கு ப்பம் நகர்மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி ‌ கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் மங்கையர்க்கரசன், நகர மன்ற துணைத் தலைவர் ஜுனத்பீவி முபாரக்,

தி.மு.க. 25-வது வார்டு கவுன்சிலர், சரவணன், 6-வது வார்டு கவுன்சிலர் சண்முகம் மற்றும் கூட்டணி கட்சி வார்டு கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News