புதுச்சேரி

சகோதரர் அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்ட காட்சி.

ஹேண்ட்பால்-போட்டி- சகோதரர் அணிக்கு சுழற்கோப்பை

Published On 2022-10-02 14:02 IST   |   Update On 2022-10-02 14:02:00 IST
  • புதுவை மாநில ஹேண்ட்பால் சங்கத்தின் அனுமதியுடன் புதுவை மாவட்ட கைப்பந்து சங்கம் 7-வது ஜுனியர் பிரிவு மாணவர்களுக்கான ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
  • வெற்றி பெற்ற சகோதரர் அணிக்கு ஒதியஞ்சாலை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் சுழல் கோப்பை மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கினார்.

புதுச்சேரி:

புதுவை மாநில ஹேண்ட்பால் சங்கத்தின் அனுமதியுடன் புதுவை மாவட்ட கைப்பந்து சங்கம் 7-வது ஜுனியர் பிரிவு மாணவர்களுக்கான ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

போட்டியில் 6 அணிகள் பங்கேற்றனர். பெத்தி செமினார் பள்ளி அணியை எதிர்த்து புதுவை நண்பர்கள் அணி விளையாடியது. இதில் பெத்தி செமினார் அணியினர் 14-4 என்ற புள்ளி கணக்கில் வென்றனர். 2-வது செமி பைனலில் புதுவை சகோதரர்கள் அணியினர் புதுவை சி.ஆர்.பி அணியை எதிர்த்து 18-8 என்ற புள்ளி கணக்கில் வென்றனர்.

இறுதி போட்டியில் சகோதரர்கள் அணியினர், புதுவை பெத்தி செமினார் அணியினரை எதிர்த்து 14-12 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற சகோதரர் அணிக்கு ஒதியஞ்சாலை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் சுழல் கோப்பை மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கினார். 2-ம் இடத்தை பிடித்த பெத்தி செமினார் அணியினருக்கு உதவி ஆய்வாளர் முருகன் சுழல்கோப்பை மற்றம் பரிசு வழங்கினார்

நிகழ்ச்சியில் ஹேண்ட்பால் சங்கத்தின் மாநில செயலர் நாராயணசாமி தலைமை தாங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை புதுவை மாவட்ட செயலர் அலெக்ஸ், துணை செயலரர் ஸ்ரீதர் உறுப்பினர்கள் சிலம்பரசன், ரதீஷ், விக்கி, அருள்அரசு ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News