புதுச்சேரி

வனத்துறை பறிமுதல் செய்த பச்சைக்கிளிகளை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பார்வையிட்ட காட்சி.

வனத்துறை பறிமுதல் செய்த பச்சைக்கிளிகளை அமைச்சர் சுதந்திரமாக பறக்க விட்டார்

Published On 2022-11-16 12:18 IST   |   Update On 2022-11-16 12:18:00 IST
  • புதுவையை அடுத்த வில்லியனூர் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக பறவைகளை பிடித்து சில நபர்கள் விற்பனை செய்தனர்.
  • பச்சைக்கிளிகள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் பட்டியல் 3-ல் உள்ளதால் வீடுகளில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும்.

புதுச்சேரி:

புதுவையை அடுத்த வில்லியனூர் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக பறவைகளை பிடித்து சில நபர்கள் விற்பனை செய்தனர்.

இதனை அறிந்த வனத்துறை அதிகாரிகள் விற்பனைக்கு வைத்திருந்த ரெக்கைகள் வெட்டப்பட்ட. கிளிகள் மற்றும் அதன் குஞ்சிகளை அதிரடியாக மீட்டனர். அவற்றை வனத்துறை பாதுகாப்பு மற்றும் மீட்பு மையத்தில் வைத்து பராமரித்து வந்தனர்.

2 மாதங்களுக்கு பிறகு கிளிகளின் இறக்கைகள் நன்கு வளர்ந்த நிலையில் அவைகளை வெளியில் பறக்க விட முடிவு செய்தனர். அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உசுட்டேரி சரணாலயப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிளிகளை சுதந்திரமாக பறக்க விட்டார்.

பச்சைக்கிளிகள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் பட்டியல் 3-ல் உள்ளதால் வீடுகளில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். அதற்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

ஆகையால் பச்சைக் கிளிகளை விற்பது வாங்குவது வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரி வஞ்சனவள்ளி, வனத்துறை அலுவலர் பிரபாகரன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News