புதுச்சேரி

பூமி பூஜையை சக்கரபாணி எம்.எல்.ஏ. சேர்மன் உஷா பி.கே.டி. முரளி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ரூ.11 கோடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்ட பூஜை

Update: 2022-12-02 09:25 GMT
  • திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்குவதாக 2020-ம் ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
  • தமிழ்,ஆங்கிலம் கம்ப்யூட்டர் சயின்ஸ், கணக்கு, வணிகவியல் ஆகிய 5 இளங்கலை பாடப்பிரிவுகளில் சுமார் 600 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

புதுச்சேரி:

திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்குவதாக 2020-ம் ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சேதராப்பட்டு செல்லும் சாலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கிடையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள காந்தி மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு பள்ளியின் ஒரு பகுதி கட்டிடத்தில் கல்லூரி இயங்கி வருகிறது.

தமிழ்,ஆங்கிலம் கம்ப்யூட்டர் சயின்ஸ், கணக்கு, வணிகவியல் ஆகிய 5 இளங்கலை பாடப்பிரிவுகளில் சுமார் 600 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், ரூ. 11 கோடியில் கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை திருச்சிற்றம்பலம் கூட் ரோடு சேதராப்பட்டு செல்லும் சாலையில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் சக்கரபாணி எம்.எல்.ஏ, வானூர் ஒன்றிய சேர்மன் உஷா பி.கே.டி. முரளி ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். இதில் துணை சேர்மன் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், தி.மு.க. கவுன்சிலர்கள் புவனேஸ்வரி ராமதாஸ், காமாட்சி விஜயரங்கன் கல்லூரி முதல்வர் முஜிரா பாத்திமா, முன்னாள் முதல்வர் வில்லியம், காந்தி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன், கல்லூரி பேராசிரியர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News