புதுச்சேரி

உலகத் தர நிர்ணய நாள் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

உலகத்தர நிர்ணய நாள் நிகழ்ச்சி

Published On 2022-11-05 15:13 IST   |   Update On 2022-11-05 15:13:00 IST
  • மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் நேஷனல் இன்ஸ்டியூஷன் போர் குவாலிட்டி அண்ட் ரிலியபிலிடி, எந்திரவியல் துறை மாணவர் அமைப்பு சார்பில் உலகத் தர நிர்ணய நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • அதில், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக, கட்டுப்பா ட்டாளர்கள், நுகர்வோர் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் உலகப் பொருளாதாரத்தில் தரப்படு த்தலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

புதுச்சேரி:

மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் நேஷனல் இன்ஸ்டியூஷன் போர் குவாலிட்டி அண்ட் ரிலியபிலிடி, எந்திரவியல் துறை மாணவர் அமைப்பு சார்பில் உலகத் தர நிர்ணய நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தலைவர் தன சேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் முன்னுரை வழங்கினார். எந்திரவியல் துறைத் தலைவர் மற்றும் இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் (இந்தியா) புதுவை மாநிலமைய தலைவர் ராஜாராம், உதவி பேராசிரியர் நடராஜன் வரவேற்றனர்.

போசெகோ இந்தியா லிமிடெட் பொறியியல் மேலாளர் கிருஷ்ணராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நிலையான அபிவிருத்தி இலக்குகளுடன் கூடிய சிறந்த உலகத்திற்கான பகிரப்பட்ட பார்வை எனும் தலைப்பில், மாணவர்களிடையே உரையாற்றினார்.

அதில், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக, கட்டுப்பா ட்டாளர்கள், நுகர்வோர் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் உலகப் பொருளாதாரத்தில் தரப்படு த்தலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். எந்திரவியல் துறை உதவி பேராசிரியர் கணேஷ் குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News