புதுச்சேரி

மதிகிருஷ்ணா புரம் பட்டாபிராமர் கோவிலில் தோழியர் பாலினம் மன்ற கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

தோழியர் பாலின மன்றம்

Published On 2022-11-01 12:41 IST   |   Update On 2022-11-01 12:41:00 IST
  • பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில், புதுவை மாநிலத்தில் முதன் முறையாக தோழியர் பாலின மன்றம் எனும் மகளிருக்கான குறை தீர்வு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
  • மகளிர் சுய உதவிக் குழுக்களின் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளில் அமைக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி:

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில், புதுவை மாநிலத்தில் முதன் முறையாக தோழியர் பாலின மன்றம் எனும் மகளிருக்கான குறை தீர்வு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த குறை தீர்வு அமைப்பு, புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அரியாங்குப்பம், வில்லியனூர் மற்றும் காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாக செயல்படுத்தப்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளில் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட மதிக்கிருஷ்ணா புரம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பில் 'தோழியர் பாலின மன்றம்' தொடங்கப்பட்டது.

இது சம்மந்தமான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலக இணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்ரமணியன், வட்டார விரிவாக்க அதிகாரி கார்த்திகேயன், வட்டார இணைப்பு அதிகாரி சாந்தமூர்த்தி, பாலின ஒருங்கிணைப்பாளர் சாவித்ரி, கிராம சேவகர் சுப்புராயன், ராணி, கலைமதி, விஷ்ணுபாரதி, ஞானா ம்பிகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News