கோப்பு படம்
புதுச்சேரியில் இலவச கொரோனா பூஸ்டர் தடுப்பூசி
- கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நம் நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட தடுப்பூசி இலவச மாக மக்களுக்கு செலுத்தப் பட்டது.
- முதல், 2-வது தவணை தடுப்பூசியை மத்திய அரசு நாடு முழுவதும் இலவசமாக செலுத்தியது.
புதுச்சேரி:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நம் நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட தடுப்பூசி இலவச மாக மக்களுக்கு செலுத்தப் பட்டது.
முதல், 2-வது தவணை தடுப்பூசியை மத்திய அரசு நாடு முழுவதும் இலவசமாக செலுத்தியது. இதுவரை நாடு முழுவதும் 96 சதவீத மக்கள் முதல் தவணையையும், 87 சதவீதத்தினரும் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
புதுவையில் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசியை 17 லட்சம் பேர் செலுத்தியுள்ளனர். இந்ந நிலையில் கடந்த ஏப்ரல் 10-ந் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டது. பூஸ்டர் தடுப்பூசிக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. அதேநேரத்தில் கொரோனா தொற்றும் குறைந்ததால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
இந்த நிலையில் சமீப காலமாக கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. புதுவையில் நாள்தோறும் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது.
பூஸ்டர் தடுப்பூசியை புதுவை அரசு மத்திய அரசிடமிருந்து விலைக்கு வாங்கி, செலுத்தி வருகிறது. முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. கடந்த 1-ந் தேதி முதல் தகுதியானவர்களுக்கு புதுவையில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது.
ஆனால் இதுகுறித்து பொதுமக்களிடம் விளம்ப ரப்படுத்தப் படவில்லை. இந்த நிலையில் மத்திய அரசே தற்போது 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது அமலுக்கு வருகிறது. ஆதார் கார்டை எடுத்து சென்று அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நல வழி மையங்களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம்.இதற்கான முறையான அறிவிப்பை புதுவை சுகாதாரதுறை இன்று மாலை வெளியிடுகிறது.