கோப்பு படம்.
- வில்லியனூர் அருகே முன்விரோதத்தில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வில்லியனூர் அருகே சங்கரன்பேட்டை சிவராந்தகம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கென்னடி.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே முன்விரோதத்தில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூர் அருகே சங்கரன்பேட்டை சிவராந்தகம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் விக்னேஷ் (வயது26). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கந்தன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில்விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்கினார். நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் தீபிடித்து எரிந்தது. மோட்டார் சைக்கிளை கந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விக்னேசின் தந்தை கென்னடி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.