புதுச்சேரி

முகாமில் மத்திய சமுக நலவாரிய இணை இயக்குனர் லோகேஷ், பேசிய போது எடுத்த படம்.

சமூக பணி மாணவிகளுக்கு களப்பணி முகாம்

Published On 2022-11-17 10:16 IST   |   Update On 2022-11-17 10:16:00 IST
  • நெட்டப்பாக்கத்தில் அமைந்துள்ள கருணாலயம் கிராம நலச்சங்க திட்ட அலுவலகத்தில் வில்லியனூரில் அமைந்துள்ள கஸ்தூரி பாய் சமூகவியல் கல்லூரியில் இருந்து 2-ம் ஆண்டு சமூக வியல் படிக்கும் மாணவிகள் கலப்பணி முகாமிற்கு வந்திருந்தனர்.
  • முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களையும் மாணவர்களையும் கர்ணாலயம் கிராம நலச்சங்கதின் திட்ட அலுவலர் சித்ரா வரவேற்று பேசினார்.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கத்தில் அமைந்துள்ள கருணாலயம் கிராம நலச்சங்க திட்ட அலுவலகத்தில் வில்லியனூரில் அமைந்துள்ள கஸ்தூரி பாய் சமூகவியல் கல்லூரியில் இருந்து 2-ம் ஆண்டு சமூக வியல் படிக்கும் மாணவிகள் கலப்பணி முகாமிற்கு வந்திருந்தனர்.

கலப்பணி முகாமை கருணாலயம் கிராம நலச்சங்க இயக்குனர் அங்காளன் பணிகள், திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விளக்கமாக எடுத்து கூறினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டெல்லியில் இருந்து வந்த மத்திய சமூக நல வாரிய இணை இயக்குனர் லோகேஷ் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் குழந்தைகள் மேம்பாட்டு நலத்திட்ட அதிகாரி செல்வகுமார், அரசு கஸ்தூரி பாய் கல்லூரி பேராசிரியர் அபிராமன் கருணாலயம் கிராம நலசங்க இணை இயக்குனர் புஷ்பவள்ளி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களையும் மாணவர்களையும் கர்ணாலயம் கிராம நலச்சங்கதின் திட்ட அலுவலர் சித்ரா வரவேற்று பேசினார்.

முடிவில் கருணாலயம் கிராம சங்க குடும்ப ஆலோசகர் அபிராமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News