புதுச்சேரி

விவசாயி கண்கள் தானம் வழங்கிய போது எடுத்த படம்.

விவசாயி கண்கள் தானம்

Published On 2022-11-17 11:36 IST   |   Update On 2022-11-17 11:36:00 IST
  • திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு ஆஞ்சநேயர் கோவில் வீதியை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 62). விவசாயியான இவர் திடீரென இறந்து போனார்.
  • தானம் பெறப்பட்ட அவரது கண்கள் புதுவை அரவிந்தர் கண் மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட்டது.

திருக்கனூர்:

திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு ஆஞ்சநேயர் கோவில் வீதியை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 62). விவசாயியான இவர் திடீரென இறந்து போனார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கனூர் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பரந்தாமன் முயற்சியின் பேரில் திருக்கனூர் லயன்ஸ் சங்க தலைவர் தமிழ்மணி, செயலாளர் அசாருதீன், பொருளாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் விவசாயி கலியபெருமாள் குடும்பத்தினரை சந்தித்து கண் தானம் குறித்து வலியுறுத்தினர்.

அவர்களது குடும்பத்தினரும் கலிய பெருமாளின் கண்களை தானம் அளிக்க சம்மதித்தனர்.

அவர்களது குடும்பத்தி னரின் சம்மதத்தின் பேரில் திருக்கனூர் லயன்ஸ் சங்கம் சார்பில் கலிய பெருமாளின் கண்கள் தானம் பெறப்பட்டது.

தானம் பெறப்பட்ட அவரது கண்கள் புதுவை அரவிந்தர் கண் மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்கனவே இதே பகுதியைச் சேர்ந்த ராஜம் அம்மாள் என்பவரின் கண்கள் தானம் பெறப்பட்டது. தற்போது 2-வதாக கலிய பெருமாளின் கண்கள் திருக்கனூர் லயன்ஸ் சங்கம் சார்பில் தானம் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News