புதுச்சேரி

கோப்பு படம்.

விவசாயி விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-11-18 10:51 IST   |   Update On 2022-11-18 10:51:00 IST
  • தவளகுப்பம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • அப்போது குழந்தை வேலு விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

புதுச்சேரி:

தவளகுப்பம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தவளகுப்பம் அருகே பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தை வேலு. (வயது 53) விவசாயி. இவருக்கு ரதி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இளையமகன் கவிதாசன் தவளகுப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

கடந்த 3 ஆண்டுகளாக குழந்தைவேலு ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இதனால் அவருக்கு அடிக்கடி மயக்கம் வரும். இதற்காக அவருக்கு நேரம் தவறாமல் அவரது மனைவி ரதி சாப்பாடு தாயாரிப்பது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குழந்தை வேலு தனது மனைவியிடம் சாப்பாடு கேட்டார். அதற்கு ரதி சாப்பாடு தயாராவதாகவும் சற்று பொறுமையாக இருக்கும் படி கேட்டுக்கொண்டார்.

இதனால் மனைவியிடம் கோபித்துக்கொண்ட குழந்தைவேலு வீட்டை விட்டு வெளியே சென்றார். வெகு நேரமாக குழந்தை வேலு வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தனர்.

அப்போது குழந்தை வேலு விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை சிகிச்சைகாக ஜிப்மர் ஆஸ்பத்தியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தைவேலு பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து அவரது இளைய மகன் கவிதாசன் கொடுத்த புகாரின் பேரில் தவளகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News