புதுச்சேரி

மாணவர்களுக்கு ஓவியம் வரைய தேவையான உபகரணங்களை உப்பளம் தொகுதி பா.ஜனதா பொறுப்பாளர் வெற்றிச்செல்வம் வழங்கிய காட்சி.

ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு உபகரணங்கள்

Published On 2023-01-21 09:05 GMT   |   Update On 2023-01-21 09:05 GMT
  • பாரதப் மோடி பொதுத் தேர்வுகள் எழுதப் போகும் மாணவர்கள் பயம் இல்லாமல் தேர்வுகளை சந்திப்பதற்காக கடந்த 2018 முதல் என்ற பரிக் ஷா பி சர்ச்சா என்கிற திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு தைரியமும், ஊக்கமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும் வகையில் ஆலோசனைகளும், மந்திரங்களும் வழங்கி வருகிறார்.
  • ஓவிய போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஓவியம் வரைய தேவையான உபகரணங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

பாரதப் மோடி பொதுத் தேர்வுகள் எழுதப் போகும் மாணவர்கள் பயம் இல்லாமல் தேர்வுகளை சந்திப்பதற்காக கடந்த 2018 முதல் என்ற பரிக் ஷா பி சர்ச்சா என்கிற திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு தைரியமும், ஊக்கமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும் வகையில் ஆலோசனைகளும், மந்திரங்களும் வழங்கி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இந்த வருடம் நேற்று புதுவை மாநிலத்தில் தேர்வுகள் எழுதப் போகும் அனைத்து தொகுதிகளிலும் உள்ள பல்லாயிரம் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு "எக்ஸாம் வாரியர்ஸ்" என்ற தலைப்பில் மாநில, மாவட்ட தலைமையின் ஆலோசனையின் படி, செல்வகணபதி எம்.பி. ஏற்பாட்டில் நடைபெற்றது.

நகர மாவட்டம் உப்பளம் தொகுதியில் உள்ள அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த ஓவிய போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த ஓவிய போட்டி, பள்ளி தலைமை அனுமதியுடன் தொகுதி பொறுப்பாளர் வெற்றிச்செல்வம், தொகுதி தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் அற்புதழகன், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கண்காணிப்பில் நடைபெற்றது. ஓவிய போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஓவியம் வரைய தேவையான உபகரணங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News