புதுச்சேரி

கோப்பு படம்.

எலக்ட்ரீஷியன் மயங்கி விழுந்து சாவு

Published On 2023-01-09 10:38 IST   |   Update On 2023-01-09 10:38:00 IST
  • நெட்டப்பாக்கத்தில் எலக்ட்ரீஷியன் மயங்கி விழுந்து இறந்து போனார். நெட்டப்பாக்கம் போலீஸ் வீதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது50). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
  • உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கத்தில் எலக்ட்ரீஷியன் மயங்கி விழுந்து இறந்து போனார்.

நெட்டப்பாக்கம் போலீஸ் வீதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது50). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

வழக்கும் போல் ஜெயச்சந்திரன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். இரவு சாப்பிட்டு விட்டு தூங்கினார். அவரது மனைவி லதா படுக்கை அறையில் பார்த்த போது அங்கு ஜெயச்சந்திரன் பேச்சு மூச்சின்றி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜெயச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருபுவனை அருகே தமிழக பகுதியான குச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன்(52). விவசாயி. இவர் ஆண்டியார்பாளையத்தில் உள்ள சாராயக்கடைக்கு சென்று சாராயம் குடித்து விட்டு வீடு திரும்புவது வழக்கம்.

அதுபோல் முருகன் ஆண்டியார்பாளையத்துக்கு சாராயம் குடிக்க சென்றார். ஆனால் அதன்பிறகு முருகன் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மகன் அஜித்குமார் சாராயக்கடைக்கு சென்ற போது அங்குள்ள இடிந்து போன கட்டிடத்தில் முருகன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அவர் அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்ததால் நாக்கு வறண்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது மகன் அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News