புதுச்சேரி

முட்டை ஏற்றிச்செல்லும் பணியை கல்வித்துறை துணை இயக்குனர் கொஞ்சுமொழி குமரன் பார்வையிட்டார். 

பள்ளி மாணவர்களுக்கு முட்டை விநியோகம்

Published On 2023-07-17 08:58 GMT   |   Update On 2023-07-17 08:58 GMT
  • சைவ உணவுகளை மட்டுமே வழங்குவதால் இந்த நிறுவனம் முட்டை வழங்குவதில்லை.
  • மதிய உணவு வழங்கி வந்த மத்திய உணவு சமையல்கூடங்கள் மூலம் முட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசின் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 14-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு மாதமாக மாணவர்களுக்கு முட்டை விநியோகம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் முதல் மாணவர்களுக்கு முட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்ஷயா பாத்திரம் என்ற தொண்டு அமைப்பு மதிய உணவை வழங்கி வருகிறது. சைவ உணவுகளை மட்டுமே வழங்குவதால் இந்த நிறுவனம் முட்டை வழங்குவதில்லை.

இதனால் ஏற்கனவே மதிய உணவு வழங்கி வந்த மத்திய உணவு சமையல்கூடங்கள் மூலம் முட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுவையில் குருசுகுப்பம், ஏம்பலம், கலிதீர்த்தாள்குப்பம் ஆகியவற்றில் உள்ள 3 மத்திய சமையல்கூடங்கள் மூலம் முட்டைகள் அவிக்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முட்டை சுழற்சி முறையில் வாரம் 3 நாட்கள் வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கு வழங்கும் முட்டையை பரிசோதித்து முத்திரையும் இடப்பட்டுள்ளது. புதுவை குருசுகுப்பத்தில் மத்திய சமையல்கூடத்திலிருந்து பள்ளிகளுக்கு வாகனங்களில் முட்டை ஏற்றிச்செல்லும் பணியை கல்வித்துறை துணை இயக்குனர் கொஞ்சுமொழி குமரன் பார்வையிட்டார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, புதுவையில் உள்ள 293 பள்ளிகளுக்கு வாரம் ஒரு லட்சத்து 56 ஆயிரம் முட்டைகள் விநியோகம் செய்யப்படஉள்ளது. சுழற்சி அடிப்படையில் பள்ளிக ளுக்கு முட்டைகள் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News