கூட்டத்தில் அன்பழகன் பேசிய போது எடுத்த படம்.
எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க வேண்டும்-அன்பழகன் பேச்சு
- புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மாநில நிர்வாகிகள், மாநில பிற அணி நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர,தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
- அ.தி.மு.க.வுக்கு துரோகம் விளைவித்தவர்கள் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மாநில நிர்வாகிகள், மாநில பிற அணி நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர,தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமைம வகித்து பேசியதாவது:-
அ.தி.மு.க.வுக்கு துரோகம் விளைவித்தவர்கள் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை. தி.மு.க.வின் பி டீம் ஆக செயல்பட்ட ஓ.பி.எஸ். சிறிதுநாளில் தி.மு.க.வில் இணைவார். புதுவை மாநில அ.தி.மு.க. தொண்டர்கள் ஒற்றுமையுடன் எடப்பாடியார் தலைமையை ஏற்று பணி ஆற்ற முன்வர வேண்டும். தமிழகம் போன்று புதுவையிலும் ஏறத்தாழ 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையை ஏற்றுள்ளனர்.
வெகு விரைவில் ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவிக்கு தி.மு.க.வை உறுதியுடன் எதிர்த்து அரசியல் நடத்தும் எடப்பாடியார் இந்த பதவியை நிச்சயம் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் அந்த நாள் அ.தி.மு.க. வெற்றி திருநாள் ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், முன்னாள் மாநில செயலாளர் நடராசன், மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், இணைச் செயலாளர்கள் வீரம்மாள், மகாதேவி, கணேசன், திருநாவுக்கரசு, துணை தலைவர் ராஜாராமன், பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழக உடையார், துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, எம்.ஏ.கே.கருணாநிதி, காந்தி, கணேசன், மூர்த்தி,சேரன், நாகமணி, மணவாளன், குமுதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.