புதுச்சேரி

கடல் அரிப்பை கட்டுப்படுத்த ராட்சத கற்கள் கொட்டும் பணியை அமைச்சர் லட்சுமி நாராயணன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோர் பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

ராட்சத கற்களை கொட்டும் பணி

Published On 2022-10-12 13:32 IST   |   Update On 2022-10-12 13:32:00 IST
  • புதுவை காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் அரிப்பின் காரணமாக கடலோர சாலைகள், மின் கம்பங்கள், குடிநீர் குழாய்கள் பெருமளவு சேதம் ஏற்பட்டு அங்கு இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
  • அரிப்பை கட்டுப்படுத்த கடற்கரை பகுதியில் ராட்சத கற்களை கொட்டி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

புதுச்சேரி:

புதுவை காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் அரிப்பின் காரணமாக கடலோர சாலைகள், மின் கம்பங்கள், குடிநீர் குழாய்கள் பெருமளவு சேதம் ஏற்பட்டு அங்கு இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி கிராம பஞ்சாயத்தார் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.விடம் முறை–யிட்டனர். இதனையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. மத்திய மந்திரி, கவர்னர், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரை தொடர்ந்து ஒரு வருட காலமாக நேரில் சந்தித்து நிலையை எடுத்துக் கூறி தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில் பிள்ளைச்சாவாடி மற்றும் காலாப்பட்டு தொகுதி மீனவ மக்களின் நீண்டநாள் கோரிக்கையான கடல் அரிப்பை கட்டுப்படுத்த கடற்கரை பகுதியில் ராட்சத கற்களை கொட்டி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கான பணியை அமைச்சர் லட்சுமி நாராயணன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பிள்ளைச்சாவடி மற்றும் காலாப்பட்டு தொகுதி மீனவ கிராமங்களை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News