யுவர் பேக்கர்ஸ் சுய தொழில் குழுவுடன் செந்தில் கலந்துரையாடிய காட்சி.
சுய தொழில் குழுவினருடன் கலந்துரையாடல்
- பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக புதுவையில் யுவர் பேக்கர்ஸ் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- மேலும் அந்த பெண்களின் முன்னேற்றத்திற்கு தானும் உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதி அளித்தார்.
புதுச்சேரி:
பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக புதுவையில் யுவர் பேக்கர்ஸ் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 400-க்கும் மேற்பட்ட பெண்கள் யுவர் பேக்கர்ஸ் மூலம் சிறகுகள் எனும் குழு அமைத்து தற்சார்பு வாழ்வியல் நிபுணர் பிரியதர்ஷினியிடம் பயிற்சி பெற்று சுயதொழில் செய்து லாபம் ஈட்டி வருகின்றனர்.
இதேபோல் மற்றொரு யுவர் பேக்கர்ஸ் மகளிர் குழுவினர் பொம்மைகள் வடிவமைப்பாளர் ஆர்த்தி தலைமையில் பயிற்சி பெற்று பொம்மைகள் செய்து அதனை விற்று லாபம் ஈட்டி வருகின்றனர்.
இந்நிலையில் யுவர் பேக்கர்சின் முதுகெலும்பாக துணை நிற்கும் ரமேஷ் என்கிற செந்தில் யுவர் பேக்கர்ஸ் அலுவலகத்தில் இந்த இரு குழுவினரையும் சந்தித்து அவர்களின் சுயதொழில் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.
மேலும் அந்த பெண்களின் முன்னேற்றத்திற்கு தானும் உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதி அளித்தார். இதில் சிறகுகள் தற்சார்பு வாழ்வியல் குழுவினர் மற்றும் பொம்மை வடிவமைக்கும் பெண்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.