புதுச்சேரி

கோப்பு படம்.

முதுநிலை படிப்புகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை

Published On 2023-08-29 11:39 IST   |   Update On 2023-08-29 11:39:00 IST
  • 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது.
  • மாணவர்கள் அசல் சான்றிதழ்களுடன் வரவேண்டும்.

புதுச்சேரி:

புதுவை பல்கலைக்கழகத்தில் நாளை  காலை 10 மணிக்கு கியூட் தேர்வு அடிப்படையில் பல்வேறு 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது.

பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட துறை தலைவர்களிடம் நேரடியாக தகவல் தெரிவிக்கலாம். பின்னர் தரவரிசையின்படி காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர்கள் அசல் சான்றிதழ்களுடன் வரவேண்டும்.

நேரடி சேர்க்கை யின்போது விண்ணப்பதா ரர்களை தேர்ந்தெடுக்க விருப்ப தேர்வு பல்கலை க்கழக இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை உதவி பதிவாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News