புதுச்சேரி
அரவிந்தர் ஆசிரமத்தில் கூட்டு தியானம் நடந்த காட்சி.
ஆசிரமத்தில் பக்தர்கள் கூட்டு தியானம்
- அரவிந்தர் 151-வது பிறந்த நாள் நடைபெற்றது.
- அரவிந்தர் மற்றும் அன்னையின் சமாதி முன்பு மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
புதுச்சேரி:
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தரின் 151-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி அதிகாலை முதல் உள்ளூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஆசிரம பக்தர்கள் ஆசிர மத்திற்கு வந்து வழிபட்டனர்.பக்தர்கள் அனைவரும் அதிகாலை நடைபெற்ற கூட்டு தியானத்தில் பங்கேற்றனர். அரவிந்தர் மற்றும் அன்னையின் சமாதி முன்பு மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் அரவிந்தரின் பிறந்தநாளையொட்டி அவர் பயன்படுத்திய அறை மற்றும் பொருட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டிருந்தது.