புதுச்சேரி

கோப்பு படம்.

நலத்திட்டங்களை பெற மீனவர்களை இழிவுபடுத்தி கொச்சைப்படுத்துவதா?

Published On 2023-06-06 05:15 GMT   |   Update On 2023-06-06 05:15 GMT
  • வையாபுரி மணிகண்டன் கண்டனம்
  • மீனவ சமுதாய மக்களுக்கு இனி எந்த சலுகையும் கிடையாது?

புதுச்சேரி: 

புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலா ளர் வையாபுரிமணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மீன்வளத்துறை சார்பில் மீனவர்களின் தனிநபர் விபரம், குடும்ப விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. புதுவை அரசின் எந்த துறையிலும் இப்படி அடுக்கடுக்கான கேள்வி களை கேட்டது கிடையாது.

மீன்களை பிடிக்கிறாயா? விற்கிறாயா? எந்தெந்த தெருக்களில் விற்கிறாய்? குடும்பத்தில் எத்தனை பேர்? அவர்கள் படித்துள் ளார்களா? மீன்பிடிக்கி றார்களா? வேறு வேலை செய்கிறார்களா?

எந்த மாவட்டத்தில் வேலை செய்கிறார்கள்? அவர்களின் புகைப்படம் எங்கே? என கொடும் குற்றவாளிகள் போலவும், அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்காக, போலியான தகவல்களை அளித்து மாபெரும் துரோகம் இழைப்பவர்கள் போலவும் மீனவ சமுதாய மக்களை என்ஆர்.காங்கிரஸ் அரசு கொச்சைப்படுத்துகிறது.

படிவத்தின் இறுதி உறுதி மொழியிலும், தவறான தகவல்களை தெரிவித்தால், தண்டனை சட்டங்களின் கீழ் வழக்கு தொடர சம்மத மும் கோரப்பட்டுள்ளது.

இதற்குமேல் மீனவ சமுதாய மக்களை புதுவையை ஆளும் அரசும், முதல்-அமைச்சரும் இழிவுபடுத்த முடியாது. மீனவ சமுதாய மக்களுக்கு இனி எந்த சலுகையும் கிடையாது? என்பதை இந்த படிவம் மூலம் என்.ஆர்.காங்கிரஸ் அரசு வெளிப்ப டுத்துகிறதா?

முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் வடக்கு, தெற்கு உட்பட புதுவை மாநிலத்தில் வாழும் 18 மீனவ கிராம பஞ்சாயத்தில் வாழும் பெரும்பாலான பாமர, படிப்பறிவற்ற மீனவ சமுதாய மக்களை என்.ஆர்.காங்கிரஸ் அரசு மறை முகமாக வஞ்சிக்க நினைக்கி றதா? மீனவ சமுதாய மக்களை இழிவுபடுத்துவதை அ.தி.மு.க. சார்பில் வன்மை யாக கண்டிக்கிறோம். மீன்வளத்துறை வழங்கி வரும் இந்த படிவத்தை உடனடியாக இந்த அரசு திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News