புதுச்சேரி

நேரு எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்த காட்சி

சமுதாய நல கூடம்-நேரு எம்.எல்.ஏ. பணிகளை தொடங்கி வைத்தார்

Update: 2022-09-29 09:20 GMT
  • ரூ. 50 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடப் பிரிவு மூலம் கல்வி மையம் மற்றும் சமுதாய நலக்கூடம் கட்டப்பட உள்ளது.
  • நேரு எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

உருளையன்பேட்டை கோவிந்தசாலை பிரியதர்ஷினி நகர் கண்டாக்டர் தோட்டம் பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடப் பிரிவு மூலம் கல்வி மையம் மற்றும் சமுதாய நலக்கூடம் கட்டப்பட உள்ளது.

இதற்கான பூமி பூஜை விழா கண்டக்டர் தோட்டம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் நடந்தது.நேரு எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் சிறப்பு பிரிவு செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் உதயகுமார் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிககள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News