புதுச்சேரி

கோப்பு படம்.

மூடிய உணவகத்தை ஜிப்மரில் மீண்டும் திறக்க வேண்டும்-நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2023-07-17 09:10 GMT   |   Update On 2023-07-17 09:10 GMT
  • ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெறும் பிரிவுக்கு வரும் புறநோயாளிகள் பயன்பெறும் விதமாக அதனருகில் உணவகம் செயல்பட்டு வந்தது.
  • நோயாளிகள் வெகு தொலைவில் சென்று அவர்களுக்கு தேவையான உணவுகளை பெற நேரிடுகிறது.

புதுச்சேரி:

புதுவை உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு ஜிப்மர் இயக்குனருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் நீரிழிவு நோயால் கிட்னி பாதிக்கப்பட்டு ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெறும் பிரிவுக்கு வரும் புறநோயாளிகள் பயன்பெறும் விதமாக அதனருகில் உணவகம் செயல்பட்டு வந்தது. தற்போது அந்த உணவகம் கடந்த மூன்று மாதமாக செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் நீரிழிவால் கிட்னி பாதிக்கப்பட்டு ரத்த சுத்திகரிப்பு செய்யும் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் உடல் சோர்வு ஏற்பட்டவுடன் அவர்களுக்கு உடனடியாக உணவோ, பருக உகந்த பானமோ உடனடியாக கிடைக்க செய்ய வேண்டும்.

ஆனால் அந்த உணவகம் மூடப்பட்டிருப்பதால் நோயாளிகள் வெகு தொலைவில் சென்று அவர்களுக்கு தேவையான உணவுகளை பெற நேரிடுகிறது. இதனால் அவர்கள் மிகவும் சோர்வடைந்து மயங்கி விழும் நிலை உள்ளது.

ஆகையால் மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு நீரிழிவு நோயால் கிட்னி பாதிக்கப்பட்டு ரத்த சுத்திகரிப்பு செய்ய வரும் நூற்றக்கணக்கான நோயாளிகளுக்கு உதவும் விதமாக அங்கு செயல்பட்டு வந்த உணவகத்தை உடனடியாக திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News