புதுச்சேரி
மாணவர்களுக்கு என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் பரிசு வழங்கிய காட்சி.
குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்.
- திருபுவனை தொகுதிக்குட்பட்ட பி.எஸ்.பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
- விழாவுக்கு பள்ளி துணைமுதல்வர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதிக்குட்பட்ட பி.எஸ்.பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி துணைமுதல்வர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். பாடகர் வேணுசெல்வம் விழிப்புணர்வு பாடல்களை பாடி மாணவர்களை மகிழ்வித்தார்.
நிகழ்ச்சியில் விரிவுரையாளர் மாயவன், ரஷித், பழனிவேல், கருணை ஞானபிரகாஷம், முருகானந்தம், அஜித்குமார், கிருபாகரன் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆங்கில விரிவுரையாளர் தியோடர் நன்றி கூறினார்.