புதுச்சேரி

தொழில்நுட்ப பயிற்சி பெற்ற மகளிருக்கு துணை சபாநாயகர் ராஜவேலு சான்றிதழ் வழங்கினார்.

கைவினை தொழில் நுட்ப பயிற்சி பெற்ற மகளிருக்குசான்றிதழ்

Published On 2022-12-20 09:50 IST   |   Update On 2022-12-20 09:50:00 IST
  • புதுவை அரசு கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் வாயிலாக அகர்பக்தி தயார் செய்யும் பயிற்சி நடைபெற்றது.
  • கைவினை தொழில்நுட்ப பயிற்சி பெற்ற மகளிருக்கு துணை சபாநாயகர் ராஜவேலு சான்றிதழ் வழங்கினார்.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் அடுத்த கரையாம்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுவை அரசு கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் வாயிலாக அகர்பக்தி தயார் செய்யும், கைவினை தொழில்நுட்ப பயிற்சி பெற்ற மகளிருக்கு துணை சபாநாயகர் ராஜவேலு சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க பதிவாளர் யஷ்வந்தயா, மேலாண் இயக்குனர் ஷியாம்சுந்தர் மற்றும் உதவி இயக்குனர் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற மகளிருக்கு 2ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்கள் வழங்க ப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகி ரமேஷ் செய்திருந்தார்.

Tags:    

Similar News