புதுச்சேரி

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ.,பரிசு வழங்கினார். அருகில் பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன், ஒலிம்பிக் சங்க இணைச் செயலாளர் வளவன், கராத்தே சுந்தரராஜன் ஆகியோர் உள்ளனர்.

காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Published On 2022-07-19 06:09 GMT   |   Update On 2022-07-19 06:09 GMT
  • பள்ளி தாளாளர் மருத்துவர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்
  • காமராஜர் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை பெரியார் நகர் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையார் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. விழாவிற்கு, பள்ளி தாளாளர் மருத்துவர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். காமராஜர் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

வெற்றி பெற்ற மழலையர்களுக்கு ரமேஷ் எம்.எல்.ஏ., புதுவை ஒலிம்பிக் சங்க இணைச் செயலாளர் வளவன், கோஜூ ரியு கராத்தே சங்க செயலாளர் சுந்தரராஜன் ஆகியோர் பரிசு வழங்கினர். காமராஜர் பற்றி மழலைகள் பேசினர். கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை ஆசிரியைகள் மகாலட்சுமி, லட்சுமி, பிரியா, சோனியா மேரி ஆகியோர் செய்தனர்.

Tags:    

Similar News