புதுச்சேரி

பசு ஈன்ற 2 தலையுடன் கன்று குட்டி

Published On 2022-11-11 09:47 GMT   |   Update On 2022-11-11 09:47 GMT
  • மாட்டின் கன்று இரு தலையுடன் இருந்ததால் கன்றை வெளியே தள்ள முடியாமல் சிரமப்பட்டது.
  • மாட்டின் உரிமையாளர்கள் மாடு சினைப்பருவத்தில் இருக்கும்போதே அதை ஸ்கேன் செய்து பார்த்திருக்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான மரக்காணத்தில் பசுமாடு சினையாக இருந்தது.

மாட்டின் கன்று இரு தலையுடன் இருந்ததால் கன்றை வெளியே தள்ள முடியாமல் சிரமப்பட்டது. மாட்டிற்கு டாக்டர் செல்வமுத்து சிகிச்சை அளித்தார்.

ஆனால், கன்றை வெளியே எடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது. இறுதியாக, கன்று வெளியே எடுக்கப்பட்டது. சில மணி நேரம் உயிருடன் இருந்த கன்று மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது.

இதுகுறித்து கால்நடை டாக்டர் செல்வமுத்து கூறியதாவது:-

கருவுற்றிருக்கும்போது கரு சரியாக பிளவுபடாததால் அரிதான இரட்டை வடிவம் உருவாகியுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் மாட்டின் உரிமையாளர்கள் மாடு சினைப்பருவத்தில் இருக்கும்போதே அதை ஸ்கேன் செய்து பார்த்திருக்க வேண்டும். அப்போது தான் முன்கூட்டியே கண்டறிந்து அதை சரி செய்வதற்கான வேலையை பார்க்க முடியும்.

இவ்வாறு டாக்டர் செல்வமுத்து கூறினார்.

Tags:    

Similar News