புதுச்சேரி

பிரான்சில் வைக்க உருவாகும் திருவள்ளுவர் வெண்கல சிலை.

பிரான்சில் திருவள்ளுவருக்கு வெண்கல சிலை

Published On 2022-10-08 14:24 IST   |   Update On 2022-10-08 14:24:00 IST
  • மகாத்மா காந்திக்கு முழு உருவ வெண்கலச்சிலையை கடந்த 2011-ல் அமைத்தது.
  • புதுவை சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்து வருகிறார்.

புதுச்சேரி:

பிரான்ஸிலுள்ள தமிழ்க் கலாச்சார மன்றம் பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று அங்கு மகாத்மா காந்திக்கு முழு உருவ வெண்கலச்சிலையை கடந்த 2011-ல் அமைத்தது.

தற்போது பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று பிரான்ஸ் அருகே செர்ஜி நகரத்திலுள்ள மைய பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது.இந்த சிலையை ஜனாதிபதி விருது பெற்ற புதுவை சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்து வருகிறார்.

சிலையின் இறுதிக்கட்ட பணி தற்போது நடக்கிறது. வெண்கலத்தில் 7 அடியில் திருவள்ளுவர் சிலை உருவாகிறது. இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்தவுடன் விமானத்தில் திருவள்ளுவர் சிலை பிரான்சுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இது குறித்து தமிழ்க்கலா ச்சார மன்ற சிறப்பு அழைப்பாளரும், முன்னாள் சபாநாயகருமான சிவக்கொழுந்து கூறுகையில், "பிரான்ஸ் அருகேயுள்ள செர்ஜி நகரில் நவம்பர் 11-ந் தேதி திறப்பு விழா நடக்கிறது. அதையொட்டி திருவள்ளுவர் மாநாடும் நடத்துகிறோம்.

சிலை அனைவரையும் கவரும் வகையில் 600கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்க்கலாச்சார மன்றத்தின் மூலம் பிரான்சில் வாரந்தோறும் தமிழ் மொழி வகுப்புகள், பண்பாட்டு இசை, நடனப்பயிற்சி வகுப்புகளை இளையோருக்கு நடத்துகிறோம். என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News