புதுச்சேரி

ரத்ததான முகாம் நடந்த காட்சி.

ரத்ததான முகாம்

Published On 2022-12-08 08:56 IST   |   Update On 2022-12-08 08:56:00 IST
  • உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் நாட்டுநலப்பணித்திட்டம் இணைந்து இலவச ரத்ததான முகாமினை கல்லூரியின் கருத்தரங்க அறையில் நடத்தியது.
  • மாணவர்களுடன் சேர்ந்து முதுகலை வணிகவியல் துறை பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் கணினி அறிவியல் துறை பேராசிரியர் கோபிநாத் உள்பட 75 பேர் ரத்ததானம் செய்தனர்.

புதுச்சேரி:

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் நாட்டுநலப்பணித்திட்டம் இணைந்து இலவச ரத்ததான முகாமினை கல்லூரியின் கருத்தரங்க அறையில் நடத்தியது. கல்லூரியின் முதல்வர் கா.உதயசூரியன், முன்னாள் இளைஞர் செஞ் சிலுவைச் சங்கத்தின் தலைவர் சிவராமச்சந்திரன் ஆகியோர் முகாமினை தொடங்கி வைத்தனர்.

புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் ரத்த வங்கிப் பிரிவு மருத்துவ அலுவலர் டாக்டர் வடிவேலு மற்றும் அவரது மருத்துவக் குழுவினரும் ரத்த தான முகாமினை நடத்தினர். மாணவர்களுடன் சேர்ந்து முதுகலை வணிகவியல் துறை பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் கணினி அறிவியல் துறை பேராசிரியர் கோபிநாத் உள்பட 75 பேர் ரத்ததானம் செய்தனர். கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி, இணை ஒருங்கிணைப்பாளர் கணேஷ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மரியசெல்வம் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News