புதுச்சேரி

மவுன ஊர்வலத்தில் செல்வகணபதி, பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் பங்கேற்ற காட்சி.

பா.ஜனதா கட்சியினர் மவுன ஊர்வலம்

Update: 2022-08-15 05:31 GMT
  • ஆகஸ்டு 14-ம் நாள் பாகிஸ்தான் பிரிவினையை கண்டித்து புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கண்டன மவுன ஊர்வலம் நடைபெற்றது.
  • பா.ஜ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

ஆகஸ்டு 14-ம் நாள் பாகிஸ்தான் பிரிவினையை கண்டித்து புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கண்டன மவுன ஊர்வலம் நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் நடைபெற்ற ஊர்வலத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட, தொகுதி, அணி, பிரிவு, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் லாஸ்பேட்டை தொகுதியில் உழவர் சந்தை அருகில் இருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டது.

3 கிலோமீட்டர் தூரம் சென்று மீண்டும் உழவர் சந்தை அருகிலேயே நிறைவு செய்தனர்.இந்த ஊர்வலத்தில் செல்வகணபதி, எம்.பி. லாஸ்பேட்டை தொகுதி தலைவர் சோமசுந்தரம், தொகுதி பொதுச் செயலாளர்கள் பாலாஜி, ரமேஷ், மாநில செயலாளர் லதா, மகளிர் அணி பொதுச் செயலாளர் கனகவல்லி, வணிகர் பிரிவு இணை அமைப்பாளர் சீனிவாச பெருமாள், மாநில பொருளாதார பிரிவு இணை அமைப்பாளர் ஆசிர்வாத ரமேஷ், உழவர்கரை மாவட்ட மகளிர் அணி தலைவி வள்ளி திருமால், வெங்கடேஷ், ஆனந்த் ,மணிமேகலை, சுரேஷ், நடராஜ், சத்யா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News