புதுச்சேரி

குஜராத் பொது தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்ற புதுவை மாநில பட்டியல் இன அணியினரை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வழியனுப்பி வைத்த காட்சி.

தேர்தல் பிரச்சாரத்திற்கு பா.ஜனதா நிர்வாகிகள் குஜராத் பயணம்

Published On 2022-11-28 14:56 IST   |   Update On 2022-11-28 14:56:00 IST
  • குஜராத்தில் நடைபெறும் பொது தேர்தலில் கடாதா தொகுதியில் பா.ஜனதா கட்சியின் பட்டியல் அணியின் தேசிய பொதுச் செயலாளர் சம்பு நாத் போட்டியிடுகிறார்.
  • பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்மாறன் தலைமையிலான குழுவினரை பா. ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் வாழ்த்தி வழி அனுப்பினார்.

புதுச்சேரி:

குஜராத்தில் நடைபெறும் பொது தேர்தலில் கடாதா தொகுதியில் பா.ஜனதா கட்சியின் பட்டியல் அணியின் தேசிய பொதுச் செயலாளர் சம்பு நாத் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று புதுவை பா. ஜனதா கட்சியின் பட்டியல் அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாநில தலைவர் முக்கிய நிர்வாகிகள் 15-க்கும் மேற்பட்டோர் குஜராத் சென்றனர்.

பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்மாறன் தலைமையிலான குழுவினரை பா. ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் வாழ்த்தி வழி அனுப்பினார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், துணை தலைவர் முருகன் கலந்து கொண்டனர். புதுவையில் இருந்து குஜராத் சென்ற குழுவில் பட்டியல் அணியின் பொதுச் செயலாளர் நாகராஜன், துணை தலைவர்கள் எஸ்.கே.சி. கஜேந்திரன், ராஜேஸ்வரி, சுப்ரமணி, சரவணன், செயலாளர் வீரப்பன் சமூக வலைதலைப் பிரிவு பொறுப்பாளர் அருள் குமார், செயற்குழு உறுப்பினர் காமாட்சி, சிறப்பு அழைப்பாளர் குணாளன் உள்ளிட்ட நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News