புதுச்சேரி

புதிய டீசல் நிலையம் அமைக்கும் பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

புதிய டீசல் நிலையம் அமைக்க பூமி பூஜை-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்

Published On 2023-04-12 11:15 IST   |   Update On 2023-04-12 11:15:00 IST
  • மீன்பிடி களன்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான டீசல் நிலையம் அமைக்க சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடர் நடவடிக்கை எடுத்தார்.
  • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் நல்லவாடு தெற்கு பகுதியில் புதிய டீசல் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

புதுச்சேரி:

மணவெளி தொகுதி நல்லவாடு மீனவ கிராமத்தில் அப்பகுதி மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீன்பிடி களன்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான டீசல் நிலையம் அமைக்க சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடர் நடவடிக்கை எடுத்தார்.

அதன் புதுவை அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பயன்படுத்த உரிமை விதிகளின்படி புதுவை மாநில மீனவர் கூட்டமைப்பு சம்பளத்திற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் நல்லவாடு தெற்கு பகுதியில் புதிய டீசல் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பொதுப்பணித்துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி, இணை இயக்குனர், துணை இயக்குனர், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் நலவாடு கிராம பஞ்சாயத்தார்கள் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், சக்திபாலன், கிருஷ்ண மூர்த்தி ரெட்டியார், வடிவேலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் மீன்பிடி படகு உரிமையாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த டீசல் பங்க் சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்குகள் மற்றும் 2 பம்புகள் அமைக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News