புதுச்சேரி

தார் சாலை அமைத்தல், பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு தொடங்கி வைத்த காட்சி.

சாலை அமைப்பதற்கான பூமி பூஜை-துணை சபாநாயகர் ராஜவேலு தொடங்கி வைத்தார்

Published On 2022-12-19 14:21 IST   |   Update On 2022-12-19 14:21:00 IST
  • நெட்டப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 38 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மடுகரை பாலாஜி நகருக்கு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
  • இதில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் மாணிக்கசாமி, இளநிலை பொறியாளர் அய்யப்பன், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 38 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மடுகரை பாலாஜி நகருக்கு தார் சாலை அமைத்தல், ஏரிப்பாக்கம் நத்தமேடு முத்து மாரியம்மன் கோவிலை சுற்றி சிமெண்டு கான்கிரீட் சாலை அமைத்தல் மற்றும் புது நகர் முதல் 2-வது குறுக்கு சாலைகளுக்கு தார் சாலை அமைத்தல், பண்ட சோழநல்லூர் குளத்து மேட்டு தெருவில் தார் சாலை அமைத்தல், பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு தொடங்கி வைத்தார்.

இதில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் மாணிக்கசாமி, இளநிலை பொறியாளர் அய்யப்பன், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News