புதுச்சேரி

கோப்பு படம்.

வக்கீல் உள்பட 2 பேரை தாக்கி கொலை மிரட்டல்

Published On 2022-12-20 14:27 IST   |   Update On 2022-12-20 14:27:00 IST
  • வில்லியனூர் அருகே வக்கீல் உள்பட 2 பேரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
  • புதுவை குண்டுபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரிசெல்வன்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே வக்கீல் உள்பட 2 பேரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுவை குண்டுபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரிசெல்வன். இவர் புதுவை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். வழக்கு சம்பந்தமாக இவரும் ரபிக்கான் என்பவரும் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

வில்லியனூர் அருகே வடமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் சபரிசெல்வன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளில் மோதுவது போல் வந்தார்.

இதனை சபரி செல்வன் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டி சபரிசெல்வனை தாக்கினார். இதனை தடுக்க முயன்ற போது ரபிக்கானையும் அவர் தாக்கினார்.

மேலும் அங்கு கிடந்த சவுக்கு தடியை எடுத்து சபரிசெல்வனின் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்து சேதப்படுத்தினார். அதோடு இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த சபரிசெல்வன் மற்றும் ரபிக்கான் ஆகிய இருவரும் வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர் இதுகுறித்து சபரி செல்வன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News