புதுச்சேரி

கோப்பு படம்.

பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர் மீது தாக்குதல்

Published On 2022-12-17 10:53 IST   |   Update On 2022-12-17 10:53:00 IST
  • ரெட்டியார்பாளை யத்தில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • மேலும் எனது தாய் கிடைக்கவில்லை என்றால் உன்னை அடித்தே கொலை செய்து விடுவேன் என்று லியோனை ஆரோக்கியராஜ் மிரட்டினார்.

புதுச்சேரி:

ரெட்டியார்பாளை யத்தில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுவை ரெட்டியார்பா ளையம் சுதாகர் நகரை சேர்ந்தவர் லியோன் (வயது 67). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரான இவர் குடும்பத்ேதாடு பிரான்சில் வசித்து வருகிறார். அவ்வப்போது புதுவைக்கு வந்து செல்வார். அப்போதெல்லாம் புதுவையை சேர்ந்த அவரது உறவினரான ஆரோக்கி யராஜ், லியோனிடம் தகராறு செய்வார்.

அதுபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லியோன் புதுவைக்கு வந்திருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த போது ஆரோக்கியராஜ் அத்துமீறி உள்ளே நுழைந்து எனது தாயை எங்கே அழைத்து சென்றாய் என கேட்டு லியோனை தாக்கினார்.

மேலும் எனது தாய் கிடைக்கவில்லை என்றால் உன்னை அடித்தே கொலை செய்து விடுவேன் என்று லியோனை ஆரோக்கியராஜ் மிரட்டினார். மீண்டும் லியோனை ஆரோக்கியராஜ் தாக்கியதால் வலி தாங்காமல் அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் ஆரோக்கியராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த லியோன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News