புதுச்சேரி
காரைக்கால் தேசியத் தொழில் நுட்பக் கழகத்தின் 2-ம் கட்ட வளர்ச்சிப் பணியாக 6 கட்டிடங்கள் கட்ட அடிக்கல்லை கவர்னர் தமிழிசை நாட்டினார்.
தேசிய தொழில்நுட்ப கழகத்தில் 2-ம் கட்ட வளர்ச்சிப்பணிகள்
- புதுவை தேசிய தொழில் நுட்ப கழகத்தின் 2-ம் கட்ட வளர்ச்சிப் பணி
- காரைக்கால், தேசிய தொழில் நுட்பக்கழக வளாகத்தில் இன்று நடந்தது.
புதுச்சேரி:
புதுவை தேசிய தொழில் நுட்ப கழகத்தின் 2-ம் கட்ட வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா காரைக்கால், தேசிய தொழில் நுட்பக்கழக வளாகத்தில் இன்று நடந்தது. கவர்னர் தமிழிசை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் முதல் -அமைச்சர் ரங்கசாமி, போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் சங்கரநாராயணசாமி, பதிவாளர் சுந்தரவரதன் மற்றும் அதிகாரிகள் உடனி ருந்தனர். விழாவில் புதிதாக 6 கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. முன்னதாக தேசியத் தொழில்நுட்பக் கழகம் வந்த கவர்னருக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.