புதுச்சேரி

தங்க பதக்கம் வென்ற மாணவர்களை பள்ளியின் நிர்வாகி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்திய போது எடுத்த படம்.

அன்னை வித்யா மந்திர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

Published On 2023-01-10 14:19 IST   |   Update On 2023-01-10 14:19:00 IST
  • புதுவையில் நடந்த மாநில அளவிலான டான்ஸ் ஸ்போர்ட்ஸ் போட்டியில் திருபுவனை அன்னை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் பங்கேற்று 24 தங்கப் பதக்கங்களையும் மற்றும் சான்றிதழை பெற்றனர்.
  • சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

புதுச்சேரி:

புதுவையில் நடந்த மாநில அளவிலான டான்ஸ் ஸ்போர்ட்ஸ் போட்டியில் திருபுவனை அன்னை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் பங்கேற்று 24 தங்கப் பதக்கங்களையும் மற்றும் சான்றிதழை பெற்றனர்.

அதைத் தொடர்ந்து தேசிய அளவிலான நடன போட்டி ஆந்திராவில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் திருபுவனை அன்னை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் ஷர்வன், தனீஷ், கனிஷ்கா, கார்த்திகா, தாருணிகா ஆகியோர் கலந்து கொண்டு தனிநடனம், ஜோடி நடனம், ஆகியவற்றில் பங்கு பெற்று தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பெற்றனர்.

சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் தனசெல்வம் தலைமை தாங்கி பாராட்டி பேசினார். திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் புதுவை சுயநிதி தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவர் ரங்கநாதன், புதுவை பீட்டாப்பர்ஸ் நடன அகாடமியின் மாஸ்டர் ஜான்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசினர்.

பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தனசெல்வம் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News