புதுச்சேரி

இந்தியகம்யூனிஸ்டு மாநிலக்குழு கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும்-இந்தியகம்யூனிஸ்டு தீர்மானம்

Published On 2022-11-26 08:30 GMT   |   Update On 2022-11-26 08:30 GMT
  • இந்தியகம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநிலக்குழு கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
  • அரசு தனியார்மய ஏற்பாடுகளை தொடர்ந்து நடத்தி வருவதை மாநிலக்குழு கண்டிக்கிறது.

புதுச்சேரி:

இந்தியகம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநிலக்குழு கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நட ந்தது.

மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். கட்சியின் தேசிய செயலாளர் அஜீஸ்பாஷா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், மாநிலக்குழு உறுப்பினர்கள் அபிஷேகம், தினேஷ்பொன்னையா, சேதுசெல்வம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மாநில தகுதி வழங்காத பா.ஜனதா கூட்டணியிலிருந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியேற வேண்டும். புதுவை மாநில அந்தஸ்து கோரிக்கையை வென்றெ டுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாநில அந்தஸ்து நடவடிக்கைக்கு வலு சேர்க்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முதல்-அமைச்சர் முடிவு எடுக்க வேண்டும்.

மின்விநியோகத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். அரசு தனியார்மய ஏற்பாடுகளை தொடர்ந்து நடத்தி வருவதை மாநிலக்குழு கண்டிக்கிறது.இந்த நடவடிக்கை தொடர்ந்தால் மாபெரும்போராட்டம் நடத்தப்படும். மின்துறை தனியார்மயத்தை முழுமையாக கைவிட வேண்டும்.

சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தும் என உத்திரவாதம் வழங்க வேண்டும். மாணவர்களை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

25 ஆண்டாக கூட்டுறவுத்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-அமைச்சர் கூட்டுறவு அமைப்புகளின் நஷ்டத்துக்கு ஊழியர்கள்தான் காரணம் என கூறியதை இந்தியகம்யூனிஸ்டு மறுக்கிறது. கூட்டுறவு சங்கங்கள் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட குழுவால் நடத்தப்பட வேண்டும்.

எனவே சட்ட விதிகளின்படி கூட்டுறவு சங்கங்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News