புதுச்சேரி

வேளாண் துறை இயக்குநர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

பயிர் இழப்பீடு தொகை-காப்பீட்டு அதிகாரி அறிவுறுத்தல்

Published On 2022-12-04 11:57 IST   |   Update On 2022-12-04 11:57:00 IST
  • புதுவை மாநிலத்தில் கடந்த 2 வருடங்களாக பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
  • கூட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தினை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் விரிவாக விவாதிக்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் கடந்த 2 வருடங்களாக பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

பயிர் காப்பீட்டு திட்டத்தினை செயல் படுத்துவதில் உள்ள நிர்வாக சிக்கல்களை களைந்து விவசாயிகளுக்கு காலத்தோடு இழப்பீடு தொகை வழங்கிட, வேளாண் துறை இயக்குநர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

வேளாண் இயக்குநர் பாலகாந்தி தலைமை தாங்கினார்.மத்திய வேளாண் அமைச்சகத்திலிருந்து பயிர் காப்பீட்டுத் துறையின் முதன்மை அதிகாரி பிந்து, தேசிய இன்சுரன்ஸ் கம்பெனியின் மண்டல இயக்குநர் நாகராஜன், முதுநிலை மண்டல மேலாளர் ராமசந்திரன், பொது சேவைமைய புதுவை மாவட்ட மேலாளர் இளந்திரையன், இணை வேளாண் இயக்குநர் ஜாகிர் உசேன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தினை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிலுவையில் உள்ள இழப்பீட்டு தொகையினை டிசம்பர் மாதத்திற்குள் வழங்கிட இன்சுரன்ஸ் கம்பெனிக்கு மத்திய அரசின் முதன்மை அதிகாரி அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News