ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.
அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- அ.திமு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழாவை புதுவை மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து புதுவை தெற்கு மாநில அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மோந்தி ரேஸ் வீதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
- மேலும் உறுப்பின ர்களுக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
அ.திமு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழாவை புதுவை மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து புதுவை தெற்கு மாநில அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மோந்தி ரேஸ் வீதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தெற்கு மாநில அ.ம.மு.க. செயலாளர் யூ.சி. ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
அவைத்தலைவர் ஹரிகிருஷ்ணன், இணைச் செயலாளர் தரணி தேவி, துணை செயலாளர்கள் பொக்கிலை மற்றும் முருகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சீதாராமன், தொழிற்சங்க பேரவை செயலாளர் சுரேஷ், முத்தியால்பேட்டை ராஜா, ஏம்பலம் தொகுதி செயலாளர் முருகன், அரியாங்குப்பம் தொகுதி செயலாளர் சரவணன், ராஜ் பவன் தொகுதி செயலாளர் கோடீஸ்வரன், உப்பளம் தொகுதி செயலாளர் பரிதிமாற் கலைஞன் மற்றும் நிர்வாகிகள் துரைசாமி, ராமு, முத்துகிருஷ்ணன், ராமநாதன், சிவனேசன், அருண், வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்
மேலும் உறுப்பின ர்களுக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.